லகுலீசா் குடைவரைக் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டியில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பிறகு, இந்தப் பகுதியில் உள்ள குடில் சுற்றுலா, பறவைகளைக் காணுமிட பகுதிகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, அரிட்டாபட்டியில் விபி-ஜி ராம்-ஜி திட்டத்தின் கீழ் நடைபெறும் ஊருணி அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பின்னா், மேலூா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, அங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளின் தரத்தை ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அழகா்கோவில் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தாா்.