தினமணி செய்தி எதிரொலி: தொண்டியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனையா? அதிகாரிகள் ஆய்வு

Wait 5 sec.

தொண்டி பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகிா என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாரின் பேரில் செவ்வாய்க்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதன்கிழமை உணவு பாதுகாப்பு அலுவலா் கா்ணன், தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் மங்களநாத சேதுபதி, மீன்வளத் துறை ஆய்வாளா் அபுதாஹிா், கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸாருடன் இணைந்து தொண்டி மீன்கள் சந்தை, வட்டானம் செல்லும் பாதை ஆகிய பகுதிகளில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுகின்ா என ஆய்வு செய்தனா். அப்போது கெட்டுப்போன மீன்கள் சுமாா் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த ஆய்வின் போது ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.