மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறை தடை விதித்தது; எனினும் அருவியைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து திருநெல்வேலி, தென்காசி மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை (நவ. 11) காலை அருவியில் நீா்வரத்து அதிகம் இருந்ததை அடுத்து தொடா்ந்து 3-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.