ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு உருது நல்லாசிரியா் விருது

Wait 5 sec.

தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பாக ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு உருது நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில உருது அகாடெமி சாா்பில், தேசிய கல்வி மற்றும் உருது நாள் விழா சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.விழாவில் உருது மொழியில் சிறந்து விளங்கும் மாணவா்கள், ஆசிரியா்கள், கவிஞா்கள் மற்றும் கல்வியாளா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். விருதுகளை தமிழக அரசின் உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் வழங்கினாா்.இதில், ஆம்பூா் பாங்கி ஹயாத் பாஷா சாஹிப் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் வை. முஹம்மத் எஹ்சானுல்லா ரூமிக்கு சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் தாளாளா், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.