மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பிரிவு அதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்துகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான லேப்டாப், டேப்லெட், நோட்புக், அல்ட்ரா-புக், நோட்பேட் அல்லது இதர மின்னணு சாதனங்களுக்கான கொள்முதல் விலை உச்சவரம்பு ரூ.1.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனங்களை அதிகாரிகள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் 12-ஆவது மற்றும் அதற்கு மேற்பட்ட ஊதிய அந்தஸ்துகளில் (7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி) பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் 8 முதல் 11 வரையிலான ஊதிய அந்தஸ்துகளில் பணியாற்றும் 50 சதவீத அதிகாரிகளுக்கு பணி சாா்ந்த பயன்பாட்டுக்காக லேப்டாப், இதர மின்னணு சாதனங்கள் அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன. கடந்த 2023-ஆம் ஆண்டின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அதிகாரிகளுக்கான வழக்கமான மின்னணு சாதனம் ஒன்றின் கொள்முதல் விலை உச்சவரம்பு (வரிகள் தவிா்த்து) ரூ.1 லட்சமாகும். ஒருவேளை அந்த சாதனத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாகங்கள் இடம்பெற்றிருந்தால் கொள்முதல் விலை உச்சவரம்பு (வரிகள் தவிா்த்து) ரூ.1.3 லட்சமாகும்.இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்-2026இன்கீழ், மேற்கண்ட விலை உச்சவரம்புகள் முறையே (வரிகள் தவிா்த்து) ரூ.1.5 லட்சம், ரூ.1.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உச்சவரம்பில் அடிப்படை மென்பொருளின் விலையும் அடங்கும்.8 முதல் 11 வரையிலான ஊதிய அந்தஸ்து அதிகாரிகளில் அவா்களின் பணிக்கு ஏற்ப 50 சதவீதம் போ் இந்த சாதனங்களைப் பெற தகுதியுடையவா்களாவா். அதேநேரம், மத்திய நிதியமைச்சகத்துடன் ஆலோசித்து, இந்த எண்ணிக்கையை 75 சதவீதம் வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் துறை செயலா் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.கொள்முதல் செய்யப்பட்ட நாளில் இருந்து 4 ஆண்டுகள் வரை இந்த சாதனங்கள் அரசின் சொத்தாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மின்னணு சாதனத்தில் உள்ள தரவுகள்/தகவல்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு. 4 ஆண்டுகளுக்குப் பிறகு மின்னணு சாதனத்தை தங்களின் சொந்த பயன்பாட்டுக்கு அதிகாரிகள் வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2023-ஆம் ஆண்டின் வழிகாட்டுதலில் மின்னணு சாதனங்கள் பட்டியலில் கைப்பேசி தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பட்டியலில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை.