பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள ஜேசன் கெளசிக்கிற்கு ஆட்டத்தை புரியவைப்பது கடினம் என தொகுப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜேசனும் போட்டி மனப்பான்மையுடன் பேசியதால், அவர் நிகழ்ச்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் முழுவதுமே எதிர்பாராத திருப்பங்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் குரல் இனி வீட்டில் ஒலிக்காது என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவரை ஜூனியர் பிக் பாஸாகத் தேர்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஜூனியர் பிக் பாஸின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றால், இடையில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், வீட்டில் உள்ள அனைவரும் அதற்கு வாக்காளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.இதன்படி முதலில் வினோத் பாபுவும், இரண்டாவதாக முனியம்மாளும், மூன்றாவதாக அடாவடி அன்சரும் ஜூனியர் பிக் பாஸ் பொறுப்புகளை வகித்தனர். இந்த வாரம் நடந்தவற்றை வார இறுதியில் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். அந்தவகையில் இந்த வாரம் ஜேசனின் நடவடிக்கைகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் அதற்கு பொறுப்புடன் பதில் கூறவில்லை. மாறாக கேலி செய்யும் உடல்மொழியுடன் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த உடல்மொழி நன்றாக இல்லை; உங்களுக்கும் நல்லதில்லை என விஜய் சேதுபதி எச்சரித்த பிறகும், அதனையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இதனால், அதிருப்தி அடைந்த விஜய் சேதுபதி, ஜேசனுக்கு ஆட்டத்தை புரியவைப்பது கடினம் என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது எனக் கூறுகிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் தகுதி ஜேசனுக்கு இல்லை என்றும் அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டதாகவும் ரசிகர்கள் பலர் அதில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் 10: எவிக்ஷனில் இருந்து அவினாஷை காப்பாற்றிய ஜேசன்!Bigg Boss 10: Jason speaks out against Vijay Sethupathi! Will he remain in the competition?