பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.இந்த நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 10 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 70-வது நாளை எட்டியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி, தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இல்லாத வகையில் புதிய விதிகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி மாறியது. அதாவது, பிக் பாஸ் இல்லாமல் பிக் பாஸ் வீடு இயங்கப்பட்டது.நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் விதி மீறினாலோ, அநாகரிகமாக நடந்துகொண்டாலோ, ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ பிக் பாஸ் குரலாக வந்து வழிநடத்தினர்.அதன்படி, இந்த வாரம் முழுவதுமே பிக் பாஸ் இல்லாமல் வீடு இயங்கியது. போட்டியாளர்களில் ஒருவர் ஜூனியர் பிக் பாஸாக இருக்கலாம் என்ற விதி வகுக்கப்பட்டு, அதன்படி, இயங்கியது.இதனிடையே, 10வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு தன்யா, அவினாஷ், முகேஷ், லட்சுமி பிரியா, டிடிவி வாசன், முனியம்மாள், முத்தழகி, ஆகிய 7 பேர் தேர்வாகி இருந்தனர்.இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற அவினாஷ், முத்தழகி ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.இவர்கள் இருவரும் கடினமான போட்டியாளர்கள் பட்டியலில் இருந்த நிலையில், அவினாஷ், முத்தழகி வெளியேறி இருப்பது பார்வையாளர்களுகு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week.அவினாஷோட அண்ணன் தங்கச்சியாவே விளையாடியிருக்கலாம்...: பிக் பாஸ் அக்ஷிதா!