கார் ஓட்டுநர் இல்லத் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த கனிமொழி எம்.பி. - குடும்பத்தினர் நெகிழ்ச்சி

Wait 5 sec.

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனது கார் ஓட்டுநரின் இல்லத் திருமண விழாவை திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமைத் தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் நீண்டகால கார் ஓட்டுநர் சத்யமூர்த்தி - மணிமேகலை இணையரின் மகள் ச. ஸ்ரீதேவி மற்றும் வி. ரோஹித் ஆகியோரின் திருமண விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி கருணாநிதி, விழாவிற்குத் தலைமை தாங்கி திருமண நிகழ்வுகளைச் சிறப்பித்தார்.வாழ்த்துஇதனைத் தொடர்ந்து, மணமக்களான எஸ். ஸ்ரீதேவி – வி. ரோஹித் ஆகியோருக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும், புரிதலுடனும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவச் செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.மேலும், மணமக்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையவும், குடும்பத்தில் அனைத்து வளங்களும் பெருகவும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.குடும்பத்தினர் நெகிழ்ச்சிதனது இல்லத் திருமண நிகழ்வு போன்று முன்னின்று கனிமொழி கருணாநிதி பங்கேற்று தலைமை தாங்கி நடத்தி வைத்து வாழ்த்தியது மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.MP Kanimozhi presides over the wedding ceremony of a car driver’s family – family members deeply movedதிருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை