டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை கேலியாக எச்சரித்த விஜய் சேதுபதி!

Wait 5 sec.

டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை நடிகர் விஜய் சேதுபதி கேலியாக எச்சரித்துள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.வார இறுதி நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசன் பேசும்போது, பேச எழும்போது ரசிகர்கள் பலர் கோஷமிட்டு கைதட்டல்களை வழங்கி வருகின்றனர். ஆனால், அவர் பேசிக்கொண்டிருக்கும்போதும் இடையே கைதட்டல்களைக் கொடுப்பதால், டிடிஎஃப் வாசன் பேசுவதை நிறுத்துமாறு கூறிவிட்டு ரசிகர்களுடன் விஜய் சேதுபதி பேசத் தொடங்கினார்.''டிடிஎஃப் வாசன் அப்படி என்ன பேசிவிட்டார் என்று கைதட்டுகிறீர்கள்'' என ரசிகர்களை நோக்கி கேலியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு ஆராவாரம் செய்த ரசிகர்கள், மீண்டும் கோஷமிட்டு கைதட்டல்களை வழங்கினர். இதனால், டிடிஎஃப் வாசன் உள்பட வீட்டில் இருந்த பல போட்டியாளர்களிடையே சிரிப்பலை எழுந்தது.பார்வையாளர்களையும் இச்செயல் வெகுவாகக் கவரும் என்பதால், கோஷமிடுபவர்களிடம் மேலும் கோஷமிடுமாறும் தான் அதற்கு நேரம் கொடுப்பதாகவும் சைகையில் கூறினார். இதனால் வார இறுதி நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனிடம் விஜய் சேதுபதி பேசும் நேரம் நீடித்துக்கொண்டே சென்றது. டிடிஎஃப் வாசனுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருப்பதால் அவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரும் கூறி வருகின்றனர். ஆனால், தன்னுடைய ஆட்டத்துக்குதான் ரசிகர்கள் கோஷமிடுவதாகவும், தன்னுடைய ஆட்டம் சரியாக இல்லாவிட்டால், தானும் தூக்கி எரியப்படுவேன் என டிடிஎஃப் வாசன் அனைத்துப் போட்டியாளர்களிடையேயும் கூறியுள்ளார். ’வெளியே ரசிகர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை தலையில் ஏற்றிக்கொண்டால், கொம்பு முளைத்துவிடும்’ என பிக் பாஸ் வீட்டில் நடிகை தன்யாவிடம் டிடிஎஃப் வாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு எதிராக ஜேசன்! போட்டியில் நீடிப்பாரா?Regarding what Vijay Sethupathi said about the applause TTF Vasan receives from his fans...