உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!

Wait 5 sec.

வங்கக் கடலில் உருவாகும் ‘அக்வான் புயல்’ தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் வங்கக் கடலில் உருவான “அர்னாப்” மற்றும் “முரசு” ஆகிய புயல்கள் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் கரையைக் கடந்தன. இதனால், தொடர்ந்து இருமுறை அம்மாநிலம் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும், சென்னை உள்ளிட்ட வடக்குக் கடலோர மாவட்டங்களில் வழக்கத்துக்கும் குறைவான மழைப்பொழிவே பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலவும் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து அடுத்த 18 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமசந்தர் கணித்துள்ளார். இதுபற்றி, இன்று (நவ. 14) காலை அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெற்கு மத்திய வங்கக் கடலில் நிலவும் தீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் அடுத்த 18 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்நவ 16 ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியிலேயே புயலாக வலுவடைய வாய்ப்பு. எனவே தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதை நாளை முதல் நவம் 20 ஆம் தேதி வரை தவிர்க்க வேண்டும்.தென்மேற்கு வங்கக் கடல், இலங்கைக் கடல் பகுதி, தெற்கு மத்திய வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நவ.15 முதல் சூறைக்காற்று, கடல் கொந்தளிப்பு அதிகரிக்கக் கூடும். நவ 16, 17 ஆகிய தேதிகளில் புயல் ஒரே இடத்தில் நிற்கும் போது கடல் கொந்தளிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.குறிப்பாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இத்துடன், வங்கக் கடலில் உருவாகும் ‘அக்வான்’ புயல் எண்ணூர் மற்றும் கடலூர் இடையே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துHemachandar has stated that 'Cyclone Akwan,' which is forming in the Bay of Bengal, may make landfall in Tamil Nadu.