காளிதாஸ் ஜெயராமின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி!

Wait 5 sec.

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ’மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அஹ்மது கபிர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் காளிதாஸ் ஜெயராம் நாயகனாகவும் லக்‌ஷ்மி ஜோதிஷ் நாயகியகாவும் நடித்துள்ளார்கள். மங்கி பிஸினஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படம் காதல், நட்பு, குடும்ப உறவுகள் தொடர்பாக உருவாகியுள்ளது. ரொமான்டிக் நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் உடன் லக்‌ஷ்மி ஜோதிஷ், போபண்ணா அலுமூடன் சஞ்சு சானிசென், சோசம்மா, ரெஜித் சேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஜாபின் ஜான் உடன் இணைந்து அஹ்மது கபிர் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். முன்னதாக அஹ்மது கபிர் ஜூன் (2019), மதுரம் (2021) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கேரள க்ரைம் ஃபைல்ஸ் என்ற இணையத் தொடடின் முதலிரண்டு சீசன்களையும் அவர் இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வரும் டிச.4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடைசியாக காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்திலும் ஆஷாகல் ஆயிரம் படத்திலும் நடித்திருந்தார்.நள்ளிரவில் வெளியான தனுஷின் ஓம் படத்தின் டிரைலர்..! டிரெண்டிங்கில் முதலிடம்!Kalidas Jayaram’s ‘Many Many Happy Returns’ to Release on December 4!