டெலிவரி ஊழியர்களுடன் இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்ற ராகுல்!

Wait 5 sec.

ஹைதராபாத்தில் டெலிவரி ஊழியர்களுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார்.நகரின் தகவல் தொழில்நுட்ப மையப்பகுதியான மாதபூரில் உள்ள ஷில்பரமம் அரசு அரங்கிலிருந்து தொடங்கி ஜெயபேரி மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் அவருடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின்போது ராகுல் காந்தி இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றார். இருசக்கர வாகன பேரணிக்குப் பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 'கிக்' தொழிலாளர்களிடையே உரையாற்றவும், அவர்களுக்கான மாநில அரசின் நலத்திட்டங்களை அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்.ராகுல் காந்தி தனது 'பாரத் ஜோடோ யாத்திரையின்போது 'கிக்' தொழிலாளர்களின் பிரச்னைகளை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் மாதம் தெலங்கானாவைச் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதாவை இயற்றியது குறிப்பிடத்தக்கது. ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2026! 12 ராசிகளுக்கும்!