நாங்கள் தற்போதும் திமுகவை நேசிக்கிறோம்: விசிக

Wait 5 sec.

நாங்கள் தற்போதும் திமுகவை நேசிக்கிறோம் என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சனிக்கிழமை (நவ. 14) தெரிவித்துள்ளார்.அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, தவெக அரசு முறையாக உதவித்தொகை வழங்குவதில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு 5 ஆண்டுகள் தொடரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் முன்மொழிந்திருக்கிறார்; அதை நான் வழிமொழிகிறேன் என்றார்.நீங்கள் அமைச்சராக இருப்பதால்தான் சமூக நீதித்துறையின் மீது, திமுக தொடர் குற்றச்சாட்டுகளை வைக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அப்படித்தான் பார்க்கிறேன். ஏனென்றால், அவர்கள் கூறுவது உண்மைக்கு மாறான செய்தி. நானோ விசிக தலைவர் திருமாவளவனோ திமுகவை நேசிக்கக்கூடியவர்கள்தான். தற்போதும் நாங்கள் திமுகவை நேசிக்கிறோம்.திமுக வன்மத்தோடு செயல்படுகிறது என்பதற்கான ஓர் உதாரணம்தான் அவர்களின் அந்தக் குற்றச்சாட்டு” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்Minister for Social Justice Vanni Arasu stated on Saturday (Nov. 14) that they still hold affection for the DMK.