மேக்கேதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி வேண்டும்! - பிரதமரிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்!

Wait 5 sec.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டும் திட்டத்தால் தமிழகத்துக்குத் தேவையான நீர்ப்பகிர்வு முழுமையாகக் கிடைக்காது எனக் கூறி தமிழக அரசு நீண்டகாலமாக அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 13) கர்நாடக மாநிலத்துக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, பெங்களூர் மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடிய முதல்வர் சிவகுமார், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில், “மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்தக் குடிநீர் திட்டத்தை மேலும் தாமதிக்காமல் உடனடியாகத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். முன்னதாக, மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ / நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தி, கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.அந்தமான் - நிகோபார், ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்Karnataka CM D.K. Shivakumar has urged PM Modi to grant all necessary clearances for the construction of the Mekedatu dam.