ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.டாம் பாண்டன் சதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 356 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டாம் பாண்டன் சதம் விளாசி அசத்தினார். அவர் 99 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோர்டான் காக்ஸ் 67 ரன்கள், ஜோ ரூட் 62 ரன்கள், வில் ஜாக்ஸ் 54* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன், ரைலி மெரிடித் மற்றும் கூப்பர் கானலி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.கஸ் அட்கின்சன் அபார பந்துவீச்சு; சமனில் ஒருநாள் தொடர்!356 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 44.3 ஓவர்களில் 220 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியது.ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 ரன்கள், டிராவிஸ் ஹெட் 7 ரன்கள், கூப்பர் கானலி 0 ரன், ஜோஷ் இங்லிஷ் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதன் பின், மாட் ரென்ஷா மற்றும் கேமரூன் கிரீன் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மாட் ரென்ஷா 63 ரன்களும், கேமரூன் கிரீன் 64 ரன்களும் எடுத்தனர். ஆடம் ஸாம்பா 18 ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லியம் டாஸன் மற்றும் சாம் கரண் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சோனி பேக்கர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 18 ஆம் தேதி ஹோபர்ட்டில் நடைபெறுகிறது.England secured a resounding 135-run victory against Australia in the second ODI.கடைசி ஒருநாள்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்தியா!