குடிநீர் விநியோகக் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது

Wait 5 sec.

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு  ஏற்பட்டதால், நான்கு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்தோடி,  வீணானது.மேட்டூர் அணையில் இருந்து சேலம் கந்தம்பட்டி பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலைக் கடந்து செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தென்னை மரத்தின் உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. அதிகாலை முதல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக வெளியேறிய குடிநீர், தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்தோடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. மேலும் வாகன ஓட்டிகள் சிலர் தங்கள் கார்களை நிறுத்தி கழுவும் பணியில் ஈடுபட்டனர்.பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானதால் அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.Burst in drinking water supply pipeline: Hundreds of thousands of litres of water wastedகார் ஓட்டுநர் இல்லத் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்த கனிமொழி எம்.பி. - குடும்பத்தினர் நெகிழ்ச்சி