கூடு படத்தில் நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் பிரபலம்!

Wait 5 sec.

கூடு என்ற புதிய படத்தில், பிக் பாஸ் பிரபலம் விஜே கதிரவன், நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ஜோயல் விஜய் இயக்குகிறார்.மேலும் இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனிசாமி ஒளிப்பதிவாளராகவும், நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைக்கிறார்.இந்த நிலையில் கூடு படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கதை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.35 days. One impossible choice. A story that will stay with you forever ✨Happy to unveil the first look of a truly special story.Inspired by an incredible true event, this is a tale of compassion, courage and humanity that will touch your hearts. pic.twitter.com/IVsxDX1i6F— Panorama Studios (@PanoramaMovies) November 14, 2026விஜே கதிரவன் தொகுப்பாளராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானாவர். இவர் சில குறும்படங்களிலும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் 6 சீசனின் பங்கேற்று, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். கடைசி வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர், ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.இந்த நிலையில், விஜே கதிரவன், கூடு என்ற புதிய திரைப்படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கவுள்ளது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Bigg Boss fame VJ Kathiravan is set to make his debut as a lead actor in a new film titled 'Koodu'. The film is directed by Joel Vijay.பிக் பாஸ் காமன்மேன் ஜேசன் நடித்த திரைப்படம் எது தெரியுமா?