கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க கோரிக்கை!

Wait 5 sec.

கெளரவ விரிவுரையாளர்களுக்கு செப்சம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ரூ. 5,000 ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும், மே மாதத்தையும் சேர்த்து ஆண்டின் 12 மாதங்களும் ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பணி ஓய்வின் போது ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 8,741 கெளரவ விரிவுரையாளர்களின் மாத தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கெளரவ விரிவுரையாளர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்பின் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. நவம்பர் மாதம் முதல் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சரே வாக்குறுதி அளித்த பிறகும் அதை நிறைவேற்றாமல் கெளரவ விரிவுரையாளர்களை ஏமாற்றுவது நியாயமல்ல. கெளரவ விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதையும் மூன்று மாதங்கள் தாமதமாக வழங்குவது அநீதி.உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தவாறு செப்டம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்குவதாக இருந்தால் ரூ. 8.74 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு இது பெரிய தொகை இல்லை. கெளரவ விரிவிரையாளர்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான ரூ.5000 ஊதிய உயர்வை செப்டம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.அதுமட்டுமின்றி, மே மாதத்தையும் சேர்த்து ஆண்டின் 12 மாதங்களும் ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, பெண் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணி ஓய்வின் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கெளரவ விரிவுரையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை Rs. 5,000 pay hike for honorary lecturers! Demand to implement it with retrospective effect from September!