ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரத் உச்சி மாநாட்டில் "இந்தியா இப்போது ஒரு ஜனநாயக நாடாக இல்லை" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளா தெலங்கானா மாநில பாஜக தலைவர் என். ராமச்சந்தர் ராவ், நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தி, மக்களின் மனித உரிமைகளை ஒடுக்கியது காங்கிரஸ்தான் என்று கூறினார். தெலங்கானா அரசு ஹைதராபாத்தில் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்திய 'பாரத் உச்சி மாநாட்டில்' மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்ததுடன், "2014 முதல் இந்தியா ஜனநாயக நாடாக இல்லை" என்றும் 2024 மக்களவைத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார். #WATCH | Hyderabad: Telangana BJP President N Ramchander Rao says, "We condemn Rahul Gandhi's attack on the BJP and Indian democracy at yesterday's Bharat Summit. We condemn his statement that since 2014, democracy has not existed in India. Before 2014, when Congress was in power, Rahul Gandhi should remember that it was his party which imposed an Emergency in this country... It was his party which dismissed several governments that were democratically elected. Where was democracy then?.. In the same tenor, the Italian leader of some political party comes and says Vote Chor, who is a foreigner, to interfere in our sovereign matters?.. I think nothing is more insulting to the nation, to the people of this country, and to the democracy of this country... Rahul Gandhi should apologise to the entire nation."— ANI (@ANI) November 15, 2026 மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்இந்த நிலையில், 'பாரத் உச்சி மாநாட்டில்,' பாஜக மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அபத்தமானது என தெரிவித்துள்ள தெலங்கானா மாநில பாஜக தலைவர் என். ராமச்சந்தர் ராவ், 2014 முதல் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று அவர் கூறிய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயகத்தை அவமதித்ததற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.2014-க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியது அவரது கட்சிதான் என்பதை ராகுல் காந்தி நினைவில் கொள்ள வேண்டும்... ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். அப்போது ஜனநாயகம் எங்கே இருந்தது?. 'பாரத் உச்சி மாநாட்டில்' பங்கேற்ற வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவர், "வாக்குகளைத் திருடியவர்களே, பதவியை விட்டு விலகுங்கள்" என்று கூறியதைக் குறிப்பிட்ட ராமச்சந்தர் ராவ், வெளிநாட்டவர் ஒருவர், நம் நாட்டின் இறையாண்மை விவகாரங்களில் தலையிட்டு, 'வாக்குத் திருடர்' என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?.. அவர் எப்படி இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பினார். இது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், நமது ஜனநாயகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று நான் கருதுகிறேன். இந்தியாவின் ஜனநாயகம் உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இன்று, வெளிநாட்டினர் முன்னிலையில் நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறைகளையும், கட்டமைப்புகளையும் ராகுல் காந்தி அவமதித்து வருகிறார்.நாட்டில் குழப்பத்தை விளைவிக்க, இத்தகைய வெளிநாட்டினர்தான் ராகுல் காந்திக்கு நிதி வழங்குகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று ராமசந்தர் ராவ் கூறினார். Telangana BJP president N Ramchander Rao on Sunday hit out at Congress leader Rahul Gandhi for his remarks that "India is actually no longer a democracy"