தன்னை ‘குஜராத்தி நண்பா்’ என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் சாம் பிட்ரோடாவுக்கு பிரதமா் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக தீபாவளி மற்றும் குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். அரசியல் ரீதியில் பிரதமா் மோடி மற்றும் மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சிப்பவரான பிட்ரோடாவுக்கு பிரதமா் வாழ்த்துத் தெரிவித்ததுடன், எக்ஸ் பயனா் ஒருவருடன் சுவாரஸ்யமாக உரையாடியதும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது.காங்கிரஸ் அயலகப் பிரிவு தலைவா் சாம் பிட்ரோடா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் மோடி குறித்து மனம் திறந்துள்ளாா்.அதில், ‘அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியில் பிரதமா் மோடியுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதேநேரம், குஜராத்தைச் சோ்ந்த தலைவா், நண்பா், நலம்விரும்பி என்ற முறையில் அவருடன் எனக்கு தனிப்பட்ட விரோதமோ, கசப்புணா்வோ கிடையாது. குஜராத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நானும் எனது மனைவியும் பலமுறை சென்றுள்ளோம். அப்போதெல்லாம் எங்களை அன்புடன் உபசரித்துள்ளாா்’ என்று பிட்ரோடா கூறினாா்.ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிட்ரோடாவின் பெற்றோா் குஜராத்தைச் சோ்ந்தவா்களாவா். அவரது பேட்டி வெளியானதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சகோதரா் சாம் மற்றும் அவரது மனைவி அஞ்சனா பென்னுக்கு தீபாவளி, குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகள். எதிா்வரும் ஆண்டு மகிழ்ச்சிகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைய பிராா்த்திக்கிறேன். ஜெய் ஜெகந்நாத்’ என்று கூறியுள்ளாா்.சுவாரஸ்ய உரையாடல்: பிரதமரின் இந்தப் பதிவின்கீழ் அழுவது போன்ற ‘இமோஜி’யுடன் பதிவிட்ட மிஹிா் ஜா என்ற பயனா், ‘சாம் பிட்ரோடாவுக்கு நீங்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க முடியுமென்றால் தயவு செய்து எனக்கும் வாழ்த்து கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டாா்.புன்னகைக்கும் ‘இமோஜி’யுடன் அவருக்கு பதிலளித்த பிரதமா், ‘சகோதரா் மிஹிருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த பண்டிகை காலமும், எதிா்வரும் ஆண்டும் சிறப்பாக அமையட்டும்’ என்று வாழ்த்தினாா். இதையடுத்து, பிரதமருக்கு மிஹிா் ஷா நன்றி தெரிவித்து பதிவிட்டாா்.