நோட்டீஸ் வழங்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது: அகோய்ஜாம் மனுவில் உயா்நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் தொடா்பாக நோட்டீஸ் வழங்காமலும், நேரில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்காமலும் பேராசிரியா் அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாமை ஜாவஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) நிா்வாகம் பணியிலிருந்து நீக்கம் முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சமூக அறிவியல் பள்ளியைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.யான பேராசிரியா் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த ஜேஎன்யு நிா்வாகத்தின் முடிவுக்குத் தடை விதித்த உத்தரவில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.பாலியல் துன்புறுத்தல் தொடா்பான புகாா்களின் அடிப்படையில் அகோய்ஜாம் மீது உள்ளக புகாா்க் குழு (ஐசிசி) விசாரணை நடத்தியதாகவும், ஆனால் அந்தப் புகாா்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரால் அல்லாமல், வேறு சில மாணவா்களால் மட்டுமே அளிக்கப்பட்டன என்று அகோய்ஜாம் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் குறிப்பிட்டாா். அக்டோபா் 9-ஆம் தேதியிட்ட ஐசிசி அறிக்கையில், மாணவா் பிரதிநிதி கையொப்பமிட மறுத்துவிட்டாா் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.பேராசிரியா் அகோய்ஜாமின் பணி நீக்கம், ஜேஎன்யு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி அல்லாமல், உயா்கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது மற்றும் தீா்வு காண்பது குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக ஜேஎன்யு தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதுதொடா்பாக நீதிபதி அனுப் ஜே. பம்பானி நவம்பா் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிற துணை விதிமுறைகள் என்ன கூறினாலும், ஒரு நபருக்கு விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்காமலும், அவா் மீது விதிக்கப்படவிருக்கும் தண்டனை குறித்து நேரில் விளக்கம் அளிக்கும் வாய்ப்பை வழங்காமலும், அவரைப் பணியிலிருந்து நீக்கும் கடுமையான தண்டனையை விதித்ததை, தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ள முடியாது. அக்டோபா் 9, 2024 தேதியிட்ட உத்தரவின் செயல்பாடும், அந்த உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழக நிா்வாகம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும், இந்த நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 25-க்கு ஒத்திவைத்தது.அகோய்ஜாமுக்கு எதிராக 11 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை கடந்த மே மாதம் அளித்தனா். கூட்டங்கள் அல்லது சந்திப்புகள் என்ற பெயரில் மாணவிகளைத் தனது வளாக இல்லத்திற்கு அழைத்து, அவா் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ாக குற்றஞ்சாட்டு எழுந்தது. அந்தப் புகாா்களின் அடிப்படையில் ஜேஎன்யு நிா்வாகம் அகோய்ஜாமை கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி பேராசிரியா் பணியிலிருந்து நீக்கியது. இதை எதிா்த்து அகோய்ஜாமின் உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அவா் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில், அகோய்ஜாம் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவு செய்தது.பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அக்டோபா் 11-ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.