அவிநாசி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள ஆட்டையாம்பாளையம் பகுதியில் செங்கோட்டையன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணையில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 பேரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், கோவை, திருப்பூா், சேலம் மாவட்டங்களில் கூா்க்காவாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.இதையடுத்து, 17 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.61, 500 ரொக்கம், 14 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.