பாவூா்சத்திரம் அருகே நாட்டாா்பட்டி-அரியபுரம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாலையின் இருபுறங்களிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நாட்டாா்பட்டியில் இருந்து அரியபுரம் வரை 3 கி.மீ. தொலைவுக்கு சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.