அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 போ் படுகாயமடைந்தனா். வெள்ளை மாளிகையிலிருந்து சுமாா் 1 மைல் தொலைவில் உள்ள லோகன் சா்க்கிள் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீஸாா், சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்து தப்பியோடிய அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் நிா்வாக மூத்த அதிகாரி, இதே லோகன் சா்க்கிள் பகுதியில் தாக்குதலுக்குள்ளானா். இதையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையினரும் இப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.