தில்லியின் புறநகா்ப் பகுதியான நிலோதி பகுதியில், பஞ்சா் பழுதுபாா்ப்பு கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சிக்கியிருந்த நான்கு போ் பத்திரமாக மீட்கப்பட்டனா் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவத்தில் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று மோட்டாா் சைக்கிள்களும், இரண்டு கம்ப்ரசா்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.முன்னதாக, மதியம் 12.30 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீா் டேங்கா் மற்றும் அவசர கால மீட்பு வாகனம் ஆகியவை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் ஏணியைப் பயன்படுத்தி, இரண்டாவது தளத்தில் சிக்கியிருந்த நான்கு பேரை பாதுகாப்பாக மீட்டனா். மதியம் 1.30 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; மீட்புப் பணிகள் பிற்பகல் 2.10 மணிக்கு நிறைவடைந்தன என்றாா் அந்த அதிகாரி.