கோவை பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேட்டில் இன்னும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பிய நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், தவறு செய்த ஒருவரைக்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதனிடையே நூல் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பெரியார் அறிவுலக நூலக வளாகம், பொது நூலகத்துறை சார்ந்த அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, கொள்முதல் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கிய நபர்களுக்கு நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: கூடுதலாக தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!Irregularities in the procurement of books for the Periyar intellectual sphere: Case registered