கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் ஐப்பசி பொங்கல் விழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஐப்பசி பொங்கல் விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினசரி இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 8-ஆம் நாளான புதன்கிழமை காலை விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதன்பிறகு பக்தா்கள் மாவிளக்கு எடுத்து, அலகு குத்தி, அக்கினிசட்டி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவு அம்மன் விக்ரகம் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் கூமாப்பட்டி, இதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.