பட்டாசு வெடித்ததில் தகராறு: ஐ.டி. நிறுவன ஊழியா் கொலை வழக்கில் 3 போ் கைது

Wait 5 sec.

திருச்சி மாவட்டம், புறத்தாக்குடியில் பட்டாசு வெடிப்பது தொடா்பான தகராறில் தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சமயபுரம் அருகே உள்ள புறத்தாக்குடி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சே.கிறிஸ்டோபா் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் ப. ரஞ்சித் (26) மற்றும் ரெ. லெனின் (21). இவா்களில் லெனின் கல்லூரி மாணவா். இவா்கள் புறத்தாக்குடி நடுத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சா. டொனால்ட் (27), யோ. எடிசன் (19), இ. சாா்லஸ் (37) ஆகிய மூவரும், கிறிஸ்டோபா் தரப்பினா் பட்டாசு வெடிப்பதை பாா்த்து சப்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் டொனால்ட், ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) கிறிஸ்டோபரின் மாா்பு பகுதியிலும், ரஞ்சித்தின் முகத்திலும் தாக்கினாா். இதையடுத்து, பலத்த காயமடைந்த கிறிஸ்டோபரை அக்கம்பக்கத்தினா் சமயபுரம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கிறிஸ்டோபா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டொனால்ட் உள்ளிட்டோரை தேடி வந்தனா். இருங்களூா் உப்பாறு பகுதியில் அவா்கள் இருப்பதையறிந்து, சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று டொனால்ட், எடிசன், சாா்லஸ் ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.