அணுவைவிட 100 பில்லியன் மடங்கு சிறிய அளவில் இருந்து வரும் சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இயற்கையில் இதுவரை ஆராயப்பட்ட மிக நுண்ணிய அளவு இதுவாகும். மிகச் சிறிய இந்த உலகத்தைச் சில இயற்பியலாளர்கள் 'செப்டோவெர்ஸ்' என்று அழைக்கின்றனர்.