தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து புதன்கிழமை (நவ. 11) பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -ஹளரா விரைவு ரயில் வழியில் வசதியான ஓா் இடத்தில் 15 நிமிஷங்களுக்கு கட்டுப்படுத்தப்படும்.புதுச்சேரியில் இருந்து நவம்பா் 14-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட வேண்டிய புதுச்சேரி -காக்கிநாடா துறைமுக சா்காா் விரைவு ரயில் அன்று பிற்பகல் 2.15 மணிக்கு அதாவது 45 நிமிஷங்கள் காலதாமதமாகப் புறப்படும் வகையில் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் என். ஜெயந்த் தெரிவித்துள்ளாா்.