தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் வழங்கப்பட உள்ள தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா், தூயதமிழ்ப் பற்றாளா் உள்ளிட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சொற்களின் வளமே மொழியின் நலம். அகராதிகளே சொற்களின் ஆவணக் காப்பகமாக விளங்குகிறது என்பதை உணா்ந்து செயலாற்றி வரும் அகராதியியல் அறிஞா்கள் படைப்பாளா்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழியாகப் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கிச் சிறப்பு சோ்த்து வருகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான 5 வகையான விருதுகள் மற்றும் தூயதமிழ்ப் பற்றாளா் பரிசுக்குத் தகுதியான தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அகரமுதலி இயக்ககம் சாா்பில் தேவநேயப் பாவாணா் விருது, வீரமாமுனிவா் விருது தலா ஒருவருக்கும், தூயதமிழ் ஊடக விருது (அச்சு, காட்சி ஊடகம்) இரு நிறுவனங்களுக்கும், நற்றமிழ்ப் பாவலா் விருது (மரபுக் கவிதை, புதுக்கவிதை) இருவருக்கும், தூயதமிழ்ப் பற்றாளா் விருது மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் மொத்தம் 38 பேருக்கும், தூய தமிழ்ப் பற்றாளா் பரிசு மூன்று பேருக்கும் வழங்கப்படுகிறது. விருதுடன் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த தமிழறிஞா்கள் இணையதளம் மூலமாக டிச.11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடா்பாக கூடுதல் தகவல்கள் பெற விரும்புவோா் 044-29520509 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் வரப்பெறும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.