இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் இதுதான்: ஷ்ரேயாஸ் ஐயர்

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது.இந்த நிலையில், நியூசிலாந்து விளையாடியபோது இருந்த ஆடுகளத்தின் தன்மை இந்திய அணி விளையாடியபோது முற்றிலும் வித்தியாசமாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக இருக்கிறது. இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் இடையே ஆடுகளத்தில் நிறைய வித்தியாசம் இருந்தது. மாட் ஹென்றி மிகவும் சிறப்பாக பந்துவீசினார். அவர் முதல் பந்திலிருந்தே சரியான இடங்களில் பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தோம். நியூசிலாந்து அணி நன்றாக விளையாடி 330 ரன்கள் எடுத்ததால், விக்கெட் பேட்டிங் செய்ய நன்றாக இருப்பதாக நினைத்தோம். அதனால், இந்த இலக்கை எங்களால் சேஸ் செய்துவிட முடியும் என நினைத்தோம். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. மாட் ஹென்றி மிகவும் அபாரமாக பந்துவீசினார். யாரும் வேண்டுமென்ற விக்கெட்டுகளை எளிதாக இழக்கவில்லை. அவை அனைத்தும் மிகவும் சிறப்பான பந்துகள். இந்தத் தோல்வியை மறந்து அடுத்தப் போட்டிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும் என்றார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி பே ஓவலில் நாளை மறுநாள் (நவம்பர் 15) நடைபெறுகிறது.Captain Shreyas Iyer has explained the reason behind the Indian team's heavy defeat in the fourth ODI against New Zealand.டக்-அவுட்டிலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!