உத்தரகண்ட்: ஐஐடி ரூர்கி விடுதி அறையில் மாணவர் தற்கொலை!

Wait 5 sec.

ஐஐடி ரூர்கி விடுதி அறையில் 19 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகண்ட் மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த மாணவர் ராஜாரியா(19). இவர் ஐஐடி ரூர்கியில் கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் பிஎஸ்-எம்எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.மேலும் விடுதி அறையில், மாணவர் எழுதியதாகக் கருதப்படும் குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தனது மரணத்திற்கு யாரையும் குறை கூற வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாணவரின் மறைவுக்கு ஐஐடி ரூர்கி நிர்வாகம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், துயரத்தில் இருக்கும் மாணவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. A 19-year-old student at the Indian Institute of Technology (IIT) Roorkee allegedly died by suicide in his hostel room, police said on Friday. அயனாவரம் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!