டக்-அவுட்டிலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

Wait 5 sec.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டக்-அவுட் ஆன விராட் கோலி, சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் டி20 போட்டித் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய முதலிரண்டு ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.இன்று (நவ. 13) காலை மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 125 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னின்ஸின் முதல் பந்திலேயே இந்திய வீரர் ரோஹித் சர்மா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளிக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் விராட் கோலி 0 (4) அவுட்டாகினார்.நியூசிலாந்துக்கு எதிரான தொடர் விராட் கோலிக்கு பெரிய அளவில் சரியாக அமையாத நிலையில், ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றையும் படைந்துள்ளார். இந்தப் போட்டியில் விராட் கோலியின் ‘டக்’ அவருக்கு ஒருநாள் போட்டிகளில் 20-ஆவது டக்-அவுட்டாக அமைந்துள்ளது.இதற்கு முன்னதாக இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் விளையாடி 20 போட்டிகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தார். பட்டியலில் முதல்வர் 5 இடங்களில் ரோஹித் சர்மாவும் இடம்பிடித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் அதிக முறை டக்-அவுட் ஆன இந்திய வீரர்கள்விராட் கோலி - 20 டக் அவுட் (321 போட்டிகள்)சச்சின் டெண்டுல்கர் - 20 டக் அவுட் (463 போட்டிகள்)ஜவகல் ஸ்ரீநாத் - 19 டக் அவுட் (229 போட்டிகள்)அனில் கும்ப்ளே - 18 டக் அவுட் (269 போட்டிகள்)ரோஹித் சர்மா - 18 டக் அவுட் (295 போட்டிகள்)Virat Kohli 0(4) Vs New Zealand 4th ODI 2026 {Ball by Ball} highlights pic.twitter.com/fdXKJa7yDB— cricket Live (@Msdhoni1546796) November 13, 2026Virat Kohli endured a forgettable outing against New Zealand in Mount Maunganui, equalling Sachin Tendulkar's unwanted record of 20 ODI ducks. Matt Henry's clever setup sent the Indian star packing for a four-ball duck during India's heavy defeat.