உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து

Wait 5 sec.

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அக். 23ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக பர்லியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதேபோல, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 65 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, பாறைகளும் கற்களும் தண்டவாளத்தில் விழுந்தன.இதனால், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மண் சரிவு ஏற்பட்ட 65 இடங்களில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தப் பணியில் ரயில்வே ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் பாதைகளில் சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையடையாததால், மலை ரயில்கள் நவம்பர் 14 முதல் 18 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 20 நாள்களாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 5 நாள்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.It has been announced that the Mettupalayam - Ooty mountain railway service is cancelled for another 5 days.கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு