சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் எடைக்கொண்ட மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தங்க நாகாபரணம் அர்ப்பணிக்கும் புனித நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சலானி குழுமத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தலைமையில் ‘சலானி ஜுவல்லரி மார்ட்’சார்பில் இந்தச் சிறப்புமிக்க தங்க நாகாபரணம் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கி அர்ப்பணிக்கப்பட்டது.சலானி குழுமத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற இந்த வரலாற்றுச் சிறப்பிமிக்க திருத்தலத்தில், யோக முத்திரையில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு இந்த சிறப்புமிக்க தங்க நாகாபரணம் அர்ப்பணிக்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே மிகுந்த பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி. விநய் முன்னிலை வகித்து நிகழ்வினை சிறப்பித்தார்.A 655-gram gold serpent ornament (naga-abharanam) has been offered to Sri Yoga Narasimhar at the Parthasarathy Temple in Thiruvallikeni!சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 11) எந்தெந்த வழக்குகள் விசாரணை?