'பாயி தூஜ்' பண்டிகை: மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து

Wait 5 sec.

புது தில்லி: 'பாயி தூஜ்' பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான ஆழமான பிணைப்பின் இனிமையையும் அன்பையும் இந்தப் பண்டிகை உணர்த்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த நன்னாளில் நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய 'பாயி தூஜ்' நல்வாழ்த்துகள்.இந்த மங்கலகரமான நாளில், அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகிறேன்," என்று பிரதமர் மோடி ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்."இந்த புனிதமான பண்டிகை, சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான அன்பான மற்றும் ஆழமான பிணைப்பின் இனிமையையும் அரவணைப்பையும் உணர்த்துகிறது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.देशभर के मेरे परिवारजनों को भाई दूज की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व भाई-बहन के स्नेहपूर्ण एवं प्रगाढ़ रिश्ते की मिठास और आत्मीयता का प्रतीक है। इस शुभ अवसर पर मैं सभी की प्रसन्नता और संपन्नता की कामना करता हूं।— Narendra Modi (@narendramodi) November 11, 2026பாய் தூஜ் பண்டிகையானது ரக்ஷா பந்தனைப் போன்றது; தீபாவளி பண்டிகையின் நிறைவு நாளில், சகோதர, சகோதரிகளுக்கு இடையே உள்ள புனிதமான உறவைக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இதில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் நூல் கட்டி, உடன்பிறப்புகளுக்கு இடையிலான புனிதமான பிணைப்பை வெளிப்படுத்துகிறார்கள்.பாய் தூஜ் நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் 'திலகம்' இட்டு ஆரத்தி எடுப்பார்கள். இது அன்பின் அடையாளமாகவும், அவர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கான பிரார்த்தனையாகவும் கருதப்படுகிறது.சகோதரர்கள் தங்களின் சகோதரிகளை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்படுவர். சடங்குகளுக்குப் பிறகு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள். Wishing a very Happy Bhai Dooj to all my family members across the nationகொல்கத்தா-சைராங் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: பயணிகள் பலர் காயம்