ஐபிஎல் டிரேடிங் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஹார்திக் பாண்டியாவின் வருகைக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அணியை கடந்த மூன்று சீசன்களாக ஹார்திக் பாண்டியாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.இருப்பினும், கடந்த மூன்று சீசன்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த மூன்று சீசன்களில் மும்பை அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.இதனிடையே, ஹார்திக் பாண்டியா வேறு அணிக்கு மாறவுள்ளதாகவும் அவரை டிரேடிங் மூலம் பெறுவதற்கு பல அணிகள் போட்டி போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹார்திக் பாண்டியா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஹார்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளிலும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அர்ஷ்தீப் சிங்.மேலும், மும்பை இந்தியன்ஸில் ரூ. 16.35 கோடி ஊதியத்தில் இருந்த ஹார்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸில் ரூ. 18 கோடிக்கு இணைந்துள்ளார்.இதேபோல், பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது முந்தைய ஊதியமான ரூ. 18 கோடிக்கே மும்பை இந்தியன்ஸில் இணைந்துள்ளார்.The trade confirmation you have been waiting for is HERE!Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan. Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from… pic.twitter.com/LMcYMjnScF— IndianPremierLeague (@IPL) November 11, 2026IPL Trading - Hardik Pandya joins Punjab Kings; Arshdeep moves to Mumbaiமிகப்பெரிய சதம் அடிப்பேன் என தந்தையிடம் வாக்குறுதி அளித்திருந்தேன்: ஆர்யவீர் சேவாக்