ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.இலங்கை அணி 102 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 404 ரன்கள் குவித்துள்ளது. இலங்கையின் தனஞ்சய டி சில்வா - குசல் மெண்டிஸ் 249* ரன்கள் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து வருகிறார்கள். நவ.9ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி இரண்டாம் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மூன்றாம் நாளில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. இதில் தனஞ்சய டி சில்வா 167*, குசல் மெண்டிஸ் 117 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள். மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி பாகிஸ்தானை விட 30 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.நான்காவது நாளில் இலங்கை அணி அதிரடியாக விளையாடி தேநீர் இடைவேளையில் 250+ ரன்கள் முன்னிலையில் டிக்ளேர் செய்யுமானால் வெற்றிக்கும் வாய்ப்பிருக்கிறது.பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் சொதப்பியே வருகிறது. முகமது அப்பாஸ் நம்பிக்கையை அளித்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.Stumps, Day 3: A magnificent day with the bat in Rawalpindi! Sri Lanka finishes the day on 404/4, trailing Pakistan's first-innings total by just 30 runs. #PAKvSL pic.twitter.com/XNc9vgMObg— Sri Lanka Cricket (@OfficialSLC) November 11, 2026பேட்டர்களின் கால் விரல்கள் ஜாக்கிரதை... எச்சரிக்கை விடுத்த மும்பை இந்தியன்ஸ்!Day 3: Stumps ,Two hundred in Pakistan soil: Sri Lanka in a strong position with 404 runs!