டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிறைவு!

Wait 5 sec.

மும்பை: உள்நாட்டில் பங்குச் சந்தையின் வலிமை, வெளிநாட்டு மூலதன வரவுகள் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைக்க பெறும் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிலைபெற்றது.வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் வரவும் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால், உள்நாட்டுச் பங்குச் சந்தை எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியதால் ரூபாய் மதிப்பு வலுப்பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 93.71 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ. 93.63 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.93.88 ஆக இருந்தது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.70 ஆக நிலைபெற்றது.நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் உயர்ந்து ரூ. 93.77 ஆக இருந்தது.The rupee gained 7 paise to close at 93.70 against the US dollar on Wednesday.ஏற்றம் கண்ட ஆட்டோ, எஃப்.எம்.சி.ஜி, நிதித்துறை பங்குகள்: 25,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 772 புள்ளிகள் உயர்வு!!