தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் உள்ள இந்தி மொழி எழுத்துக்களை தார் பூசி அழிப்போம்! - வைகோ

Wait 5 sec.

தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி மொழியில் உள்ள எழுத்துக்களை தார் பூசி அழிப்போம்! என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லை கற்கள் நடும் பணிகள், பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி மொழியிலும் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தஞ்சாவூர் - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள், தூரம் எழுதப்பட்ட போது மறுமலர்ச்சி திமுக மற்றும் அரசியல் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. எங்கள் தோழர்கள் இந்தி எழுத்தைத் தார் பூசி அழித்தார்கள்.தற்போது மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ,ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் மைல் கற்களில் இந்தி மொழியில் எழுதி டெல்லியின் மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுத்திருக்கிறது.1952 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாட்டு தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். 600 தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் பெரியார் இந்தியை தார்பூசி அழித்தார். அதே நாளில் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுகவும் இதே போராட்டத்தை நடத்தியது.இந்தி ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிமைப் பத்திரம் எழுதித் தர முடியாது என்பதே 1967 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பின்பற்றி வரும் உறுதியான மொழிக் கொள்கை.இந்த நிலையில், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா வழியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தஞ்சாவூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்துகிறது.நவம்பர் 12 ஆம் தேதி கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆடுதுறை ஆர். முருகன் தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வி. தமிழ்ச்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஜி. சரவணன், திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் காசி. சிவவடிவேலு, நாகை மாவட்டச் செயலாளர் ராமஞ்சேரி ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொளஞ்சி என்ற சி. சந்திரமோகன் ஆகியோருடன் கழகத்தின் நிர்வாகிகள் தஞ்சை சேலம் தேசிய நெடுஞ்சாலை என்எச்-136 இல் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தி வாசகங்களை தார் பூசி அழிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இதே நிலைப்பாடு தொடர்ந்தால் நவம்பர் 29 ஆம் நாளுக்கு பிறகு எனது தலைமையில் மைல் கற்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடரும் என வைகோ கூறியுள்ளார். We will smear tar over the Hindi-language lettering on national highway milestones to obliterate them! - Vaikoதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு 655 கிராம் தங்க நாகாபரணம் சமர்ப்பணம்!