பொங்கல் பண்டிகை: சில நிமிஷங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்கள்!

Wait 5 sec.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு பாண்டியன், வைகை உள்ளிட்ட பெரும்​பாலான விரைவு ரயில்​களில் முன்பதிவு டிக்கெட்கள் சில நிமிஷங்​களி​லேயே விற்றுத்தீர்ந்​தன.அடுத்தாண்டு (2027) ஜன.15-ஆம் தேதி (வெள்​ளிக்​கிழமை) பொங்கல் பண்​டிகை கொண்​டாடப்​படவிருக்கிறது. ஜன. 14-ஆம் தேதி போகி, 16-ஆம் தேதி மாட்​டுப்​பொங்​கல், 17-ஆம் தேதி காணும் பொங்​கல் ஆகிய பண்​டிகைகளும் அடுத்தடுத்து உள்ளன.பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்​களுக்குச் செல்ல வசதியாக ரயில்​களில் 60 நாள்​கள் முன்​னே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.அதன்​படி, ஜன.14-ஆம் தேதி சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்​பட டிக்​கெட் முன்​ப​திவு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை 8 மணிக்கு ஐஆர்​சிடிசி இணை​யதளம் வழியாகவும், ரயில் நிலையங்​களில் வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆர்சிடிசி இணையதளம் வழக்கம் போல முடங்கிய நிலையில், சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.சென்​னை​யில் இருந்து மதுரை, திருநெல்​வேலி, செங்​கோட்டை, கன்​னியாகுமரி, தூத்​துக்​குடி ஆகிய ஊர்​களுக்கு புறப்​படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்​துநகர் விரைவு ரயில்களின் 2-ஆம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்​டிகளிலும், வந்தே பாரத், வைகை விரைவு ரயிலில் 2-ஆம் சிட்டிங், சிசி உள்ளிட்ட இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிஷங்களுக்குள் விற்றுத்தீர்ந்தன. சில ரயில்களுக்கான முன்பதிவில் ரெக்ரெட் வந்ததால் பலரும் வருத்தத்துக்குள்ளாகினர்.In anticipation of the Pongal festival, reserved tickets for most express trains—including the Pandian and Vaigai expresses—sold out within just a few minutes.