கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம்!

Wait 5 sec.

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு முருகன் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவ. 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செந்தூரில் சனிக்கிழமை காலை சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோன்று, பழனி, சென்னையில் வடபழனி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ. 15) நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோயிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் குவிந்து வருகின்றனர். சென்னையில் வடபழனி திருப்போரூர், சிறுவாபுரி, பண்ருட்டி உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வடபழனியில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை வழங்கப்பட்டு நிலையில், முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.On the occasion of the Kanda Sashti festival, large numbers of devotees are gathering at various prominent Murugan temples across Tamil Nadu to offer their prayers.