மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Wait 5 sec.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள், பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இதனால், இவ்விரு தொகுதிகளும் காலியாகி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை (அக். 6) வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.இதனிடையே, எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தலுக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுதன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்ததாவது, காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்களின் சொந்த சுயவிருப்ப ராஜிநாமாவால் இந்த காலியிடங்களைச் செயற்கையாக உருவாக்கிய எதிர் மனுதாரர்கள், அந்த காலியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வாதிட முடியாது.ஆகையால், இந்த மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.வெற்றிப் பயணம் திட்டத்துக்கு எதிர்ப்பு: இன்று வழக்கு விசாரணைAppeal filed in the Supreme Court seeking to stay the by-elections in the Maduranthakam and Dharapuram constituencies