சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகனங்கள் சாகசம்: 16 பேர் கைது, 67 வாகனங்கள் பறிமுதல்

Wait 5 sec.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சாகசத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 67 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலும், சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வீலிங் மற்றும் பிற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.இதுபோன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க, நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Police arrested 16 people for engaging in two-wheeler stunts near Valluvar Kottam in Chennai.காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!