தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமையில் நடைபெறவுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் இவ்விரு தொகுதிகளுக்கும் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 165 பள்ளிகள், இடைத்தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களாகச் செயல்படவுள்ளன. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் ஈடுபடவிருப்பதால், தாராபுரத்தில் 266 பள்ளிகளும், திருப்பூரில் 61 பள்ளிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 21 பள்ளிகளிலும் வேலை நாள்களாக இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 348 பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.இதேபோல், மதுராந்தகம் தொகுதியிலும் தொகுதிக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுகிறது.இருப்பினும், இவ்விரு தொகுதிகளிலும் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமையில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, காலாண்டு விடுமுறை முடிந்து இன்று (அக். 5) பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் மட்டும் அக். 7 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!By-election: Two-day holiday for schools in Maduranthakam and Dharapuram