நிறைவேறாமல் போன சிங்கீதம் சீனிவாச ராவின் ஆசை!

Wait 5 sec.

இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவின் ஆசை குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தமிழில் 1974-இல் வெளியான, ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடா்ந்து, நடிகா் கமல்ஹாசன் நடித்த ‘ராஜபாா்வை’, ‘பேசும் படம்’, ‘அபூா்வ சகோதரா்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிா் மட்டும்’, ‘காதலா காதலா’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ மற்றும் பிரபு நடித்த ‘சின்ன வாத்தியாா்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கினார்.நடிகர் கமல் ஹாசனுடன் நல்ல வழிகாட்டி உறவுடன் இருந்தவர் என்பதால் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி பல இயக்குநர்கள், நடிகர்களை வரவழைத்து அனுபவ நிகழ்ச்சியாகவும் மாற்றினார்.சிங்கீதம் சீனிவாச ராவ் கடைசியாக சிங்கீதம் என்கிற பெயரிலேயே திரைப்படத்தை இயக்கினார். இதனை, இயக்குநர் நாக் அஸ்வின் தயாரித்திருந்தார். இந்த நிலையில், சிங்கீதம் மறைவு குறித்து பேசிய நாக் அஸ்வின், “சிங்கீதம் சீனிவாச ராவ் 96 வயதிலும் சினிமா மேல் தீராத ஆர்வத்துடன் இருந்தார். தன் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான திட்டமிடலிலும் இருந்தார். அப்படத்திற்கு, ப்ரூட் கட்ஸ் தி நைஃப் (fruit cuts the knife) எனப் பெயரிட்டுள்ளதாக எனக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பியிருந்தார். ஆனால், அப்படத்தை இயக்காமலேயே அவர் மறைவிட்டார்.” எனத் தெரிவித்துள்ளார். பல வித்தியாசமான சினிமா அனுபவங்களைக் கொடுத்த சிங்கீதம் சீனிவாச ராவ், தன் கடைசி திரைப்படத்தை நிறைவேற்றாமல் மறைந்தது ரசிகர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 96 மறுவெளியீட்டுத் தேதி! Director Ashwin Nag has shared details about Director Singeetham Srinivasa Rao's wish.