கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.திருவருட் பிரகாச வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாா் 5.10.1823 அன்று கடலூா் மாவட்டம், மருதூா் கிராமத்தில் பிறந்தாா். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய அவா், சுத்த சன்மாா்க்க சங்கத்தை தொடங்கினாா். பசிப்பிணி போக்க வடலூரில் சத்திய ஞான சபை, தரும சாலையை நிறுவினார். புலால் உண்ணாமை, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தி வந்தாா். இவரது கொள்கைகள் உலகளவில் பிரசித்திபெற்றவை. வள்ளலாரின் 204-ஆவது அவதார நாள் விழா வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 7.30 மணியளவில் தரும சாலையில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, வள்ளலாா் அவதரித்த மருதூா் கிராமத்திலும் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இரு இடங்களிலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.The 204th Avatar Day festival of Vallalar was celebrated on Monday in Vadalur, Cuddalore district.ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்!