சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.5) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

Wait 5 sec.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்புத் தொடரப்பட்ட வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.5) விசாரணைக்கு வருகின்றன.வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என பல முக்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணக்கு வர விருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்.. * பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு.* வெற்றிப் பயணத் திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கு.* முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தொடர்ந்த தேர்தல் வழக்குகள்.* பொதுக்கூட்டம், சாலை வலத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கு.இன்று தீர்ப்புஜெம் வீரமணி விவகாரத்தில் அமைச்சர்கள், தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Important matters listed before Madras High Court on today