டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தவறவிட்து. இந்த நிலையில், முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் நோக்கில் அணியில் பல்வேறு மாற்றங்களை நிர்வாகம் செய்து வருகிறது.அந்த வகையில், கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக, 2019-ல் டெல்லி அணியின் ஆலோசகராகவும், நிர்வாகத்தின் கிரிக்கெட் இயக்குநராகவும் கங்குலி பொறுப்பு வகித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கங்குலி செயல்பட்டுள்ளார்.இதுகுறித்து கங்குலி தெரிவித்திருப்பதாவது:“ஐபிஎல் தொடரில் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணி, எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான அணி. பல ஆண்டுகளாக இந்த அணியுடன் எனக்கு ஒரு வலுவான உறவு இருக்கிறது.வருகின்ற சீசனில் டெல்லி அணியுடன் இணைந்து பணியாற்றி, ஒரு வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜூன் மாதம், ஐபிஎல் அணிகளுக்கு இடையே நடந்த டிரேடிங்கில், லக்னெள அணியிலிருந்து மீண்டும் டெல்லி அணிக்கு ரிஷப் பந்த் திரும்பியது குறிப்பிடத்தக்கது.Ganguly appointed as Delhi Capitals head coach!